தமிழ்நாடு

இரவில் பேருந்து நடத்துனரை தாக்கியதாக 2 பேர் கைது

மன்னார்குடி அருகே வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

சிவா

மன்னார்குடி அருகே வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

  திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.தஞ்சை அடுத்துள்ள வாண்டையார்இருப்பு என்ற இடத்தில் இப் பேருந்தில் ஏறிய 2 பேர் காரிக்கோட்டை என்ற இடத்தில் பேருந்தை நிறுத்த வேண்டும் என கூறினராம்.இதற்கு பேருந்து நடத்துனர் ரா.பாலபைரவன்(26)இது விரைவு பேருந்து என்பதால் காரிக்கோட்டையில் நிறுத்த முடியாது வடுவூர் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவும் என கூறியதை 2 பேரும் ஏற்றுக்கொண்டனராம்.

 பின்னர் பேருந்து வடுவூர் வந்து சேர்ந்த போது அந்த இடத்தில் 2 பேரும் இறங்க மறுத்து நடத்துனருடன் வாய் தகராறில் ஈடுப்பட்டு வந்தவர்கள்.காரிக்கோட்டை வந்ததும் நடத்துனர் பாலபைரவனை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

 இதில் காயமடைந்த பாலபைரவன் மன்னார்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு பின்னர் இது குறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார் இது தொடர்பாக காட்டூர்,மேலத்தெரு,தெய்வசிகாமணி மகன் தெட்சிணாமூர்த்தி(23),காரிக்கோட்டை,தெற்குதெரு,ராமச்சந்சிரன் மகன் அரவிந்த்(23)ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்து மேல்விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!!

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை எவ்வளவு?

மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர்!

நல்லகண்ணு மறைவு! தவெக தலைவர் விஜய் அஞ்சலி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?

SCROLL FOR NEXT